Monday, January 4, 2010

Wacky Questions from Job Interview - at GigaOm

Wonder how one fares with these lateral-thinking type of questions:

http://gigaom.com/2009/12/30/24-wacky-questions-from-real-job-interviews/

Saturday, January 2, 2010

உதிரிப் பூ?

ஸேஃப்வே (Safeway) கடையிலிருந்து சில பொருட்களை வாங்கி வெளிவருகையில்,  பதின்மவயதுப் (teenage) பையன் ஒருவன் உருளிச்சறுக்கி (Roller skate) மேல் நின்றவண்ணம் கேட்கிறான் 'ஒரு 25 சென்ட் இருக்குமா?'. ஏதாவது குளிர்பானம் வாங்கக் காசு சற்றுக் குறைந்திருக்குமோ என்று எண்ணியவாறு பணப்பையைத் திறந்து ஒன்றுக்கு இரண்டு 25 சென்ட் நாணயங்களை அவனுக்கு அளிக்கிறேன். 'நன்றி' என்றவாறு உருளிச்சறுக்கியை உற்சாகமாக உந்தி நகர்கிறான்.

பொருட்களைக் காரில் வைத்துவிட்டு கார்நிறுத்தம் (Parking lot) வழியாக நான் கிளம்பிச் செல்கையில் பார்க்கிறேன், அவன் ஒரு 50மீ தொலைவில் இருந்த ரைட் எய்ட் (Rite Aid) என்ற கடையின் பக்கவாட்டில். அங்கே செம்பட்டை முடியுடன் ஒரு பெண். பதின்மவயதுத் தோற்றம். அவனது நண்பி? பக்கத்தில் குளிர்பான விற்கும் இயந்திரம். அவளுக்கும் தனக்கும் குளிர்பானம் வாங்கத்தான் காசு கேட்டிருக்க வேண்டும். உதவி செய்ததில் திருப்தி. ஆனால், உற்றுப் பார்த்தால் அது பெரிய பாட்டில்களில் தண்ணீர் விற்கும் இயந்திரம். ஒருவேளை முன்னால் இருக்கும் விற்பனை இயந்திரங்களில் செய்தித்தாள் வாங்குவானோ? யோசித்துக் கொண்டு வருவதற்குள், அவன் மீண்டும் வேகமாக ஸேஃப்வே கடையை நோக்கிச் செல்கிறானே! சம்பளத்தை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் கணவன் போல பெற்ற காசை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மீண்டும் இன்னொருவரிடம் காசு கேட்கவா?

காரைத் திருப்பி அவனை கவனிக்க வசதியான ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, உள்ளே அமர்ந்திருக்கிறேன். ஸேஃப்வே கடை வாயில் ஓரத்தில் நின்றவன் வாயிலின் முன் நகர்கிறான். கடையிலிருந்து யாராவது வெளியே  வருகிறார்களா? அவன் அவர்களிடமும் 'ஒரு 25 சென்ட் இருக்குமா?' என்று கேட்கிறானா? மீண்டும் வாயில் ஓரத்துக்கு அவன் திரும்பவில்லை. சரியாகத் தெரியாததால், நன்கு பார்க்க வசதியான இடத்துக்குச் சென்று காரை நிறுத்துகிறேன். மீண்டும் பெற்ற காசை அப்பெண்ணிடம் ஒப்படைக்கச் சென்றுவிட்டானோ?  ஆனால் ரைட் எய்ட் கடையின் பக்கவாட்டில் தண்ணீர்/செய்தித்தாள் இயந்திரங்களின் முன் அவர்களைக் காணோமே!

உருளிச்சறுக்கியில் வேகமாக வெளியே சென்றுவிட்டானா? ஒருவேளை ஸேஃப்வே கடைக்குள் குளிர்பானம் வாங்கத்தான் சென்றானா? வேறொருவரிடமும்  காசு யாசித்தானா? நான் தேவைப்பட்ட ஒருவனுக்குத்தான் உத வி செய்தேனா? (Is that right aid?) இல்லை தேவையில்லாமல் யாசிக்கும் பழக்கத்துக்கு ஊக்கம் கொடுத்துவிட்டேனா?

வாசிக்கும் வயதில் இவன் ஏன் யாசிக்கிறான்? அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு போதிய காசு  தருவதில்லையா? அவன் வேறு கொடிய பழக்கங்களுக்கு அடிமையாகி பெற்றோர்களிடம் இருந்து உதிர்ந்து போனவனா? அவனுடைய தோற்றம் அப்படித் தெரியவில்லையே! பொருள்களோடு கேள்விகளையும் நெஞ்சில் சுமந்து வீட்டுக்குத் திரும்புகிறேன்.

மனம் என்னவோ மீண்டும் மீண்டும் ஸேஃப்வேக்குள் அவன் குளிர்பானம் வாங்கச் சென்றிருப்பான் என்று நம்பவே விழைகிறது!

Wednesday, December 16, 2009

சாந்தா தாத்தா நம் தாத்தா!

சாந்தா தாத்தா நம் தாத்தா!
(along Mary Had Little Lamb and காந்தித் தாத்தா நம் தாத்தா)


சாந்தா தாத்தா நம் தாத்தா!
சாந்தா தாத்தா நம் தாத்தா
நம் தாத்தா நம் தாத்தா
சாந்தா தாத்தா நம் தாத்தா
அவர் சாந்த நல் தாத்தா!

தாடி பாரு வெள்ளை தான்
வெள்ளை தான் வெள்ளை தான்
தாடி பாரு வெள்ளை தான்
அது மூடும் வாயைத் தான்!

தொப்பை பாரு பெரிசு தான்
பெரிசு தான் பெரிசு தான்
தொப்பை பாரு பெரிசு தான்
அவரால் தூக்க முடியாமே!

வருடம் பூரா வட துருவம்
வட துருவம் வட துருவம்
வருடம் பூரா வட துருவம்
அவர் வசித்து வருவா ராம்!

கிறிஸ்மஸ் நாள் வந்த வுடன்
வந்த வுடன் வந்த வுடன்
கிறிஸ்மஸ் நாள் வந்த வுடன்
அவர் கீழே வருவா ராம்!

சறுக்கு வண்டி அவர் ஏறி
அவர் ஏறி அவர் ஏறி
சறுக்கு வண்டி அவர் ஏறி
சாமம் வருவார் பரிசு தர!

சின்னச் சிம்னி வழியாக
வழி யாக வழி யாக
சின்னச் சிம்னி வழியாக
சிரித்துக் குதிப்பார் நம் வீட்டில்!

தருவார் நமக்குப் பரி செல்லாம்
பரி செல்லாம் பரி செல்லாம்
தருவார் நமக்குப் பரி செல்லாம்
அவர்தானே சாந்தா நம் தாத்தா!
Christmas had a Santa Claus
(along the lines of Mary Had a Little Lamb)


Christmas had a Santa Claus,

Santa Claus, Santa Claus,

Christmas had a Santa Claus,

His beard was white as snow.


And everywhere that Christmas went,

Christmas went, Christmas went,

and everywhere that Christmas went,

Santa was sure to go.


He followed it to school one day

School one day, school one day,

He followed it to school one day,

It was ok with the rules.


He made the children laugh and play,

Laugh and play, laugh and play,

He made the children laugh and play

to see a Santa at school

---

You had just replaced a few words in the popular rhyme

  • Mary = Christmas
  • Little Lamb = Santa Claus
  • Fleece = beard
  • She/Her = It
  • It = He
to get the above.